ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்து புதிய முறையில் அதை வெளிப்படுத்தினார்.இதை பற்றி பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அபு தாபி:
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை அணிகள் நேத்து பலப்பரீட்சை நடத்தினர்.முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.மும்பை அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 21 பந்துக்களில் 60 ரன்கள்( 7 சிக்ஸர்கள்,2 பௌண்டரிகள்) அடித்து மிரட்டினார்.ஆனால் அதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டோக்ஸ் சதம்,சஞ்சு சாம்சன் அரை சதத்தால் 19 ஓவர்களில் மும்பை அணியிடம் இருந்து வெற்றியை பறித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..
அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் தனது முதல் அரை சதத்தை கடந்து அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இடது காலின் முட்டியை மடக்கி வலது கையை வானத்தை நோக்கி உயர்த்தி வெளிப்படுத்தினார்.இந்த முறையானது #BlackLivesMatter பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதை பாண்டியா செய்தார், அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து #BlackLivesMatter என்ற பிரச்சாரம் உலகம் முழுக்க பல பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இப்படி முட்டி போட்டு கைகளை உயர்த்தி பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இது குறித்து bcci நிர்வாகமோ,ஐ.பி.எல் தொடரிலோ எதுவும்,யாரும் பேசவில்லை.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா #BlackLivesMatter ஆதரவு தெரிவித்த நிலையில்,இந்த முறையானது bcci விதி முறைக்கு உட்பட்டது இல்லை பலர் எதிர்ப்பு தெரிவித்தும்,சில பேர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவு தெரிவித்தும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.