விராட் கோலி நேற்று சர்வதேச டி20 போட்டியில் தனது முதலாவது சதத்தை அடித்ததுடன் ஒட்டுமொத்தமாக 71வது சர்வதேச சதத்தையும் பூர்த்தி செய்தார்.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் நேற்று மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்தது.
குறிப்பாக, அதிரடியாக ஆடிய விராட் கோலி, 1020 நாட்களுக்கு பிறகு தனது 71வது சர்வதேச சதத்தை பூர்த்திசெய்தார். (ரிக்கி பாண்டிங் 71 சதம்) அதோடு டி20 போட்டிகளில் தனது முதலாவது சதத்தை நிறைவுசெய்தார். இதையடுத்து கோலியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். போட்டிக்கு பிறகு பேசிய அவர், தனது கடினமான காலக்கட்டத்தில் தன்னுடன் நின்றவர்கள் அனுஷ்கா சர்மா மற்றும் தனது மகள் வாமிகா என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த சதத்தை அவர்கள் இருவருக்கும் சமர்ப்பிக்கிறேன். ஓய்வு எடுத்துக்கொண்டது கிரிக்கெட்டை மீண்டும் அனுபவிக்க அனுமதித்துள்ளது என்றும் கூறினார்.