பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி ஐ.பி.எல் தொடரில் 100 விக்கெட்கள் எடுத்து பும்ரா அசத்தியுள்ளார்.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் பலரும் பல சாதனைகள் நிகழ்த்தி வருகின்றனர்.இந்த நிலையில் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி ஐ.பி.எல் தொடரில் 100 வது விக்கெட்கள் எடுத்து பும்ரா அசத்தியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை அணி சார்பில் அறிமுகம் ஆகிய பும்ரா.தொடர்ந்து தனது வித்தியாசமான பந்து வீச்சு முறையிலும்,யார்க்கரை அதிகம் பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க வைத்த அவர் இன்று உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக கலக்கி வருகிறார்.ஐ.பி.எல் தொடரில் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பும்ரா 89 போட்டிக்களில் 100 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.மேலும் இதே போட்டியில் பட்டிகல்,மற்றும் சிவம் துபே விக்கெட்களை கழட்டி அசத்தினார்.
பும்ரா பெங்களூர் அணிக்கு எதிராக அறிமுகம் ஆன முதல் போட்டியின் முதல் விக்கெட் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி தான்.இன்று 100 வது விக்கெட்டும் கோலி விக்கெட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.உலகின் நம்பர் 1 பௌலர் பும்ரா உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை எடுப்பது சிறப்பு..மிக சிறப்பு..