தவானின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் டெல்லி அணி இலக்காக வழங்கியது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து டெல்லி அணி சார்பில் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் பிரித்திவி சா களம் இறங்கினர்.இந்த முறையும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்திவி சா 7 ரன்களில் வெளியேற,தவான் கடந்த முறை 100 அடித்த உற்சாகத்தில் இந்த முறையும் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிரடியை வெளிப்படுத்தி கொண்டு இருந்தார்
.கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தன் பங்கிற்கு 14 ரன்களில் அவுட் ஆக,தொடர்ந்து ஆடிய தவான் இந்த தொடரில் 4 வது அரை சதத்தை கடந்தார்.13 வது ஓவர் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடக்க,மேக்ஸ்வல் வீசிய அடுத்த ஓவரிலேயே ரிஷப் பண்ட்(14 ரன்கள்,20 பந்துகள்) அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.16 வது ஓவர் ரவி பிஸ்னோய் பந்தில் தவான் 80 ரன்களில் இருந்த பொழுது அவர் கொடுத்த கேட்ச்சை மேக்ஸ்வல் தவற விட,முருகன் அஸ்வின் வீசிய அடுத்த ஓவர் முதல் பந்தே தவான் அட்டகாசமாய் ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார்.
17 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து இருக்க,சமி வீசிய 18 வது ஓவரில் ஸ்டோனிஸ் 9 ரன்களில் வெளியேறினார்.அடுத்த ஓவரில் அதிரடியை தொடர்ந்த தவான் 57 பந்துகளில் இந்த தொடரில் இரண்டாவது சதத்தை பதிவு செய்து அசத்த,அதே ஓவரில் ஹட்மயர் ஒரு சிக்ஸரை தெறிக்கவிட்டார்.சமி வீசிய கடைசி ஓவர் கடைசி பந்தில் ஹட்மயர் கிளீன் போல்ட் ஆக,20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்காக வழங்கியது.
தவான் 61 பந்துகளில் 106 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.