பூரனின் அதிரடி அரைசதத்தால் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடத்தை பிடித்து அசத்தியது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து தவானின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் டெல்லி அணி இலக்காக வழங்கியது.
165 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் அகர்வால் தொடக்கம் தந்தனர்.ஆரம்பத்திலே கேப்டன் கே.எல்.ராகுல் அக்சார் வீசிய 3 வது ஓவரில் அவுட் ஆக,அடுத்து களம் இறங்கிய கிறிஸ் கெயில் அடுத்தடுத்து பௌண்டரி,சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கெயில்(29 ரன்கள்,13 பந்துகள்) அஸ்வின் வீசிய 6 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆக,அதே ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் அகர்வால் ரன் அவுட் ஆகி நடையை கட்டினார்.
மறுமுனையில் டெல்லி அணியின் பௌலர்ஸ் போட்ட பந்துகளை அடித்து நொறுக்கிய பூரன் 27 பந்துகளில் 50 ரன்களை கடக்க,ரபடா வீசிய அடுத்த பந்தே பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.13 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து இருந்தது.அடுத்து ஓரளவு அடித்து ஆடிய மேக்ஸ்வல் 32 ரன்கள் அடித்து ரபடா பந்தில் அவுட் ஆக,டெல்லியின் ஸ்கோர் மித வேகத்தில் ஏறியது.ஹூடா மற்றும் நீசம் அடுத்தடுத்து பௌண்டரி,சிக்ஸர் அடிக்க,பஞ்சாப் அணி ஒரு ஓவர் மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த தவானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 4 வெற்றிகள் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது.மீதம் உள்ள 4 போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது.
டெல்லி அணி இதுவரை 7 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட பிளே ஆப்க்கு தகுதி பெற்றுவிடும்.இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்று அடுத்த போட்டி வரை காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.