இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் என்பதை, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
விளையாட்டு உலகில் விரர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு, தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக, உலகின் மிக பணக்கார கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யிடம் ஸ்பான்சர்ஷிப் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ள, போட்டி சற்று கடுமையாக இருக்கவும். இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் அணி வீரர்களுக்கான அனைத்து உபகரணங்களையும் வழங்க, அதற்கு மாறாக இந்திய அணி வீரர்கள் அணியின் உடைகளில் அந்நிறுவனம் தொடர்பான விளம்பரங்கள் இடம்பெற்று இருக்கும்.
இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக நீண்ட காலம் இருந்த பெருமை சஹாரா நிறுவனத்திற்கு சேரும். சமீபத்தில் அந்த உரிமையை பைஜூஸ் நிறுவனம் பெற்று இருந்த நிலையில், தற்போது அந்த உரிமையை வேறு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி, அடுத்த மூன்றாண்டுகளுக்கு எம்பிஎல் என்றழைக்கப்படும் மொபைல் பிரீமியர் லீக் செயலி ஸ்போர்ட்ஸ் நிறுவனமே ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு kit ஸ்பான்ஸராக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். வரும் 27ந் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் எனவும் கங்குலி தெரிவித்தார். ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாட உள்ளது.