மகேந்திர சிங் தோனிக்கு தற்போது 39 வயதாகிறது. இந்தியாவிற்காக கிட்டத்தட்ட 16 வருடங்கள் விளையாடி விட்டார். டெஸ்ட் டி20 ஒருநாள் என அனைத்திலும் பல சாதனைகள் படைத்து விட்டார். இனிமேல் தன்னை கிரிக்கெட்டில் நிரூபிக்க ஏதுமில்லை எனுமளவுக்கு ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் நம்ப தல.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலககோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடாமல் இருக்கும் இவர் சீக்கிரத்தில் இவர் ஓய்வு பெற்று விடுவார் என்று தெரிகிறது. மேலும் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி டி-20 உலக கோப்பை தொடரில் ஆடுவதாக இருந்த இவரது கனவும் தற்போது பறிபோய் விட்டதாகவே தெரிகிறது.
ஏனெனில் இந்தாண்டு நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த வருடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திற்குள் தோனிக்கு 40 வயதாகிவிடும். இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் இவர் நன்றாக விளையாடினால் மட்டுமே அவரது வாய்ப்பு இந்திய அணியில் உறுதியடையும்
இதுகுறித்து தற்போதுகருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் நல்ல உடல் தகுதியும், திறனும் இருந்தால் தோனி தொடர்ந்து விளையாடலாம். யாரையும் ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப் படுத்தக்கூடாது. அதேபோன்று வயதை காரணம் காட்டி எந்த ஒரு வீரரை ஓரம் தள்ளி விடக் கூடாது. வீரரின் ஓய்வு என்பது அவரின்தனிப்பட்ட முடிவாகும். இந்த வருட ஐபிஎல் தொடர் அவருக்கு மிகப்பெரிய தொடராக அமையும் என எதிர்பார்க்கிறேன்
ஏற்கனவே பல முன்னாள் வீரர்கள், தோனி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடினால் மட்டுமே அவர் இடம் பிடிக்கும் வாய்ப்பு அமையும் என்று தெரிவித்துள்ளனர்.