மும்பை – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை அணி டெல்லியை எதிர்கொள்கிறது. பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று களமிறங்குகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. மும்பை அணியைப் பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்து அடுத்தடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
இதனால் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் அந்த அணி உள்ளது. இதேபோல் 2 வெற்றிகள் பெற்றுள்ள டெல்லி அணியும் 3வது வெற்றிக்காக போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




