ரஷ்யாவில் உதை பந்து போல ஊது பந்தாட்டப் போட்டிகள் பிரபலமடைந்து வருகின்றன.

வெளிநாட்டவர்கள் அவ்வப்போது புதுப்புது விளையாட்டுகளை கண்டுபிடித்து பிரபலபடுத்துகின்றனர் தற்போது ரஷ்யாவில் ஊது பந்தாட்டம் விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது.
பன்னிரெண்டு நபர்கள் பங்கேற்கும் இந்த விளையாட்டில் பங்கேற்பாளர்கள் ஒரு மேசையில் உடலை மறைத்துக் கொண்டு தலை மட்டும் வெளியே தெரியும்படி அமர்ந்து கொள்கின்றனர். அவர்களை நோக்கி வரும் பந்தை உதை பந்தாட்டம் போல தங்களது மூச்சுக்காற்றால் ஊதி கோல் அடிக்கின்றனர்.
இந்த விளையாட்டு பிரபலமடைந்தாலும் ஒருவரது மூச்சுக்காற்று மற்றொருவரின் மீது படுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.




