ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில்லின் அரை சதத்தால் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபுதாபி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது.
இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபில் தொடங்கியது.டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்து 4 விக்கெட் இழந்து 142 ரன்கள் எடுத்தது.அதன் பிறகு 143 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்ட வீரர்களாக சுப்மன் கில்,நரைன் களம் இறங்கினர்.முதல் ஓவரில் கில் சிறப்பாக புவனேஷ்வர் குமார் பந்தில் ஒரு பௌண்டரி அடிக்க,கலீல் அகமத் வீசிய 2 வது ஓவரில் நரைன் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அதே ஒவரில் கில் ஒரு சிக்ஸரை பறக்கவிட,மறுமுனையில் நிதிஷ் ராணாவும் புவனேஷ்வர் குமார் ஓவரில் 2 பௌண்டரிகளை ஓட விட்டார்.தொடர்ந்து அதிரடி காட்டிய ராணா அடுத்து கலீல் வீசிய ஓவரிலும் ஹாட்ரிக் பௌண்டரி அடித்து அசத்தினார்.தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்த்த ராணா தமிழக வீரர் நடராஜன் வீசிய 4.4 வது ஓவரில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
மறுமுனையில் கில் நிலைத்து நின்று கலீல் அகமத் பந்தில் இரண்டு 2 பௌண்டரிகளை தெறிக்கவிட,6 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 50 ரன்களை கடந்தது.அடுத்த ஓவர் ரஷித் கான் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் LBW முறையில் ரன்கள் எதுவுமின்றி வெளியேற,மோர்கன் கில் உடன் இணைந்தார்.10 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது.சுப்மன் கில் நடராஜன் வீசிய 12.3 வது ஓவரில் ஒரு பௌண்டரி அடித்து 50 ரன்களை கடந்தார்.மோர்கனும் கில்லும் அவ்வப்போது பௌண்டரிகளை ஓட 16 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து இருந்தது.14 பந்துகளுக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலையில் மோர்கன் நடராஜன் பந்தில் ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி அடித்து கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் வெற்றி பெற்றது.கில் 70 ரன்களுடனும்,மோர்கன் 42 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர்.
கொல்கத்தா அணி வெற்றி பெற முக்கிய காரணமாய் இருந்த சுப்மன் கில்லுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.




