ஆர்ச்சரின் கடைசி நேரம் அதிரடி விளையாடி ஹைதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்காக வழங்கியது ராஜஸ்தான் அணி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி சார்பில் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ்,ராபின் உத்தப்பா களம் இறங்கினர்.சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த ராபின் உத்தப்பா(19 ரன்கள்,13 பந்துகள்) தேவையில்லாமல் 1 ரன்களுக்கு ஆசை பட்டு ரன் அவுட் ஆக,ஸ்டோக்ஸ் உடன் இணைந்து சஞ்சு சாம்சனும் அதிரடியை வெளிப்படுத்தினார்.
ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் பெற்று இருக்க,ஹோல்டர் வீசிய 12 வது ஓவரில் சாம்சன்(36 ரன்கள்,26 பந்துகள்) ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பந்தே கிளீன் போல்ட் ஆகி நடையைக்கட்டினார்.அடுத்த ஓவர் வீசிய ரஷித் கான் ஸ்டோக்ஸை 30 ரன்களில் வெளியேற்ற,15 வது ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது.விஜய் சங்கர் வீசிய 16 வது ஓவரின் முதல் பந்தே கேப்டன் ஸ்மித் பௌண்டரியை ஓட விட,அதே ஓவரில் பட்லர்(9 ரன்கள்,12 பந்துகள்) நதீம்மிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
நடராஜன் வீசிய 18 வது ஓவரில் ரியான் பராக் அடுத்தடுத்து 2 பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடிக்க,ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரில் ஸ்மித் 19 ரன்களில் நடையைக்கட்டினார்.அதே ஓவரில் பராக்(20 ரன்கள்,12 பந்துகள்) வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,கடைசி ஓவர் வீசிய நடராஜன் பந்தில் ஆர்ச்சர் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்தார்.20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்காக வழங்கியது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ஹோல்டர் 3 விக்கெட்களும்,ரஷித் கான் மற்றும் விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.