ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள தமிழக வீரர் நடராஜன் இந்த போட்டியின் மூலம் சர்வதேச போட்டியில் தடம் பதிக்கிறார்.
ஆஸ்திரேலியா :
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.இந்திய அணி ஏற்கனவே 66 மற்றும் 51 ரன்கள் என்ற முறையில் ஆஸ்திரேலிய அணியுடன் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது.இன்று நடைபெறும் 3 வது ஒரு நாள் போட்டி கான்பெர்ரா ஓவல் மைதானத்தில் தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இன்று நடக்கும் 3 வது ஒருநாள் போட்டியில் ஐ.பி.எல் தொடரில் அசத்தி இந்திய அணியில் அதிரடியை இடம் பிடித்த தமிழக வீரர் நடராஜன் களம் இறங்கினார்.துல்லியமாக யாக்கர்களை சொல்லி வீசும் நடராஜன் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார் என்று பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இந்திய அணியில் சைனி,சகால் மற்றும் மாயங்க் அகர்வால் நீக்கப்பட்டு சர்துல் தாகூர்,நடராஜன் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.