விராட் கோலியின் சரியான திட்டத்தால்தான் இந்திய அணி வெற்றிகளை குவிக்கிறது என பிராட் ஹாக் பேசியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி துவங்கியது. இதில் முதல் நான்கு நாட்களில், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருந்த நிலையில், கடைசி நாளில் இங்கிலாந்து அணி படுமோசமாகச் சொதப்பி 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.
அடுத்தது, அடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25 முதல் 29 வரை ஹெட்டிங்கிலியின் நடைபெறவுள்ளது. இந்திய அணி தற்போது நல்ல பார்மில் இருப்பதால் அடுத்த மூன்று டெஸ்ட்களிலும் அபார வெற்றிபெறும் என கருதப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணி சரசரவென வெற்றியை குவித்து வருகின்றது. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம், இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடர், தற்போது இங்கிலாந்து சுற்றுப் பயணம் என் அனைத்திலும் ஒரு கை பார்த்து வருகிறது. மேலும் கடந்த ஐந்தாண்டுகளை விடாமல் வெற்றி கோப்பையை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் பெருமையும் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் பிராட் ஹக், இந்திய இவ்வாறு மிக சிறப்பாக விளையாடி வெற்றியை குவிகிறது என்றால் அதற்க்கு கோலியின் சிறந்த திட்டங்களும் அதை செயல்படுத்தும் முறையும் தான் காரணம் என கூறினார்.
மேலும் அவர், விராட் இந்திய அணியை மிக சிறப்பாக விழி நடத்துகிறார். புதிதாக களமிறங்கும் வீரர்களை அவர்களின் மனம் போல் ஆட அனுமதிக்கிறார். அதனால் அவர்களும் எந்த தடையும் இன்றி பின்னி பெடலெடுக்கின்றனர். குறிப்பாக, அணி வீரர்களின் தேவைக்களை நிறைவேற்றி, கட்டுக்கோப்பாக வழிநடத்துகிறார். இதுதான் இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம்” என கோலியின் கேப்டன்ஸியை ஹாக் தாறுமாறாகப் புகழ்ந்து தள்ளினார்.