இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் விரைவில் குழந்தை பிறக்க போவதாக அறிவித்துள்ளனர்.

கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என்று அழைக்க படுபவர் இந்திய கேப்டன் விராட்கோலி ஆவார். இவர் தலைமையில் இந்திய அணி பெரியதாக ஐ. சி. சி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக உள்ளது.
மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் இவர் தலைமையில்தான் தொடரை கைப்பற்றியது. விராட் கோலி திரைப்பட நடிகையான அனுஷ்கா ஷர்மாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். 2017 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை விராட் கோலி வெளியிட்டுள்ளார். இப்போது நாங்கள் மூவர் என்றும் ஜனவரி 2021ல் எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவரும் அனுஷ்கா சர்மாவும் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து சமூகவலைத்தளங்களில் விராட் கோலிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.




