கொரோனா அறிகுறிகளின் டைம்லைன் குறித்தும் அதனை கவனிக்காமல் விட்டால் அடுத்து என்ன நிகழும் என்பதை குறிக்கும் சிவகங்கை சேர்ந்த பொது நல மருத்துவரான Dr.ஃபரூக் அப்துல்லா அளித்துள்ள தகவல்கள் .
முதல் வாரம்
காய்ச்சல் ( தாங்கக்கூடிய அளவில் இருந்து மிக அதிமான உஷ்ணம்) – ஒரு சில நாட்கள் தொடர்ந்தும் இருக்கலாம்.
முதலில் அடித்து விட்டு சில நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் அடிக்கலாம்.
வறட்டு இருமல்,பிறகு சளியுடன் இருமல்,உடல் வலி /சோர்வு /அசதி,தூக்கம் வந்து அசத்திக்கொண்டே இருப்பது,நுகர்தல் திறன் இழப்பு,சுவைத்தல் திறன் இழப்புசிலருக்கு வயிற்றுப்போக்கு /தொண்டை வலி என்றும் தோன்றுகிறது.
முதல் வாரத்தின் இறுதி நாட்களில் /இரண்டாம் வாரத்தின் ஆரம்ப நாட்களில்
நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வு,மூச்சு விடுவதில் லேசான சிரமம்பிறகு சிறுகச்சிறுக சிரமம் கூடுவது,மூச்சுத்திணறல்இரண்டாம் வாரத்தின் மத்தியில்/ இறுதியில்தீவிர மூச்சுத்திணறல் நிலைஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குச்செல்லும் நிலை ஏற்படுகிறது மரணம் நிகழ்கிறது.
முதல் வாரத்தில் நோய் கண்டறியப்பட்டுசிகிச்சைக்கு முந்தியவர்களுக்கு இரண்டாம் வாரத்தில் நிகழ இருக்கும் பிரச்சனைகள் பெரும்பான்மை தவிர்க்கப்படுகின்றன.காலம் தாழ்த்தி மருத்துவமனையை அடைபவர்களுக்கே அதிக விகிதத்தில் மரணம் நிகழ்கிறது.
கொரோனா தொற்று என்பது “இரண்டு வார நோயாகும்”
நோய் தொற்று அடைந்த ஒருவரை கட்டாயம் இரண்டு வாரம் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.பொதுவாக முதல் அறிகுறி தோன்றியதில் இருந்து இரண்டு வாரங்களுக்கு பெரிய பிரச்சனை தோன்றவில்லை என்றால் அதற்குப்பிறகு தோன்றுவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு.
கொரோனா தொற்றில் பிர்சசனைக்குரிய நாட்கள் அறிகுறி தோன்றியதில் இருந்து ஏழு நாட்கள் முதல் பதினான்கு நாட்கள் வரை நேரும் மரணங்களில் பெரும்பான்மை இந்த இரண்டாம் வாரத்தில் நிகழ்பவை தான்.
அறிகுறிகள் தென்பட்டால் முந்திப்பரிசோதனை செய்து சிகிச்சையை துரிதமாகப்பெறுவது உயிர்காக்கும் நடவடிக்கை ஆகும்.