Monday, March 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

February 1, 2021

சமீபத்தில், ச்ச என்ன மனுசன் யா என்று அனைவரையும் ஆச்சரியத்தில் முனுமுனுக்க வைத்தவர் ராகுல் காந்தி. இப்படி அனைவரும் கூறக்காரணம் தமிழ் மக்களிடம் அவர் காட்டிய எளிமை தான். ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகையில், தேசிய கட்சியான காங்கிரசும் தன் பங்கிற்கு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.  எதிர்கட்சியான திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி இதுவரை நீடிக்கிறது. 

2016 சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களைப் போராடிப் பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் ஒதுக்கியது தான் தோல்விக்கான முக்கிய காரணமாக கருதினர் கட்சியினர்.  இதனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த இடம் ஒதுக்கி, தான் அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

நடந்து முடிந்த மக்களைவை தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் இந்த சட்டமன்ற தேர்தலுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டும் என முடிவு செய்துள்ளது திமுக தலைமை. மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற்று இருந்தால் சட்டமன்ற தேர்தலில் 3 இடங்கள் ஒதுக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, காங்கிரஸ் கட்சி மக்களைவை தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 27 இடங்கள் தான் ஒதுக்க முடியும் என திமுக தலைமை கூறியுள்ளது.

மேலும், கூட்டணி கட்சிகளையும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக செய்திகள்  வெளியாகின. இந்த கோரிக்கையை திமுக வலியுறுத்தினால்  அதற்கு காங்கிரஸ் உடன்படுமா என்பதும் சந்தேகம் தான். காங்கிரஸ் கட்சி இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்றால் திமுகவின் கூட்டணி காங்கிரஸ்க்கு முக்கியம். ஏனெனில் பாஜக, ஆளும் அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இவை தவிர கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிஸின் செல்வாக்கு எப்படி உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

2011 சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களிலும், 2016 சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலும் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் 2011 தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. அதனால் காங்கிரஸின் தோல்வி பெரிதாக கேள்விகளை எழுப்பவில்லை. ஆனால், 2016 தேர்தலில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தது. பல இடங்களில் 500, 1000 என்ற வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுகவிடம் தோற்றது. இதனால் இந்த முறை காங்கிரஸின் தோல்வி பற்றி கேள்வி எழுந்தது.

காங்கிரஸ்க்கு குறைந்த இடங்களை ஒதுக்கி இருந்தால் அந்த தொகுதிகளில் திமுக நின்று வெற்றிபெற்றிருக்கலாம் என்று கட்சியினர் நினைத்தனர். இதனால் தான் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த இடம் ஒதுக்க முடிவு செய்துள்ளது திமுக.

இந்நிலையில் தான் ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் மூன்று நாள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸின்  முன்னாள் தலைவரான  ராகுல் காந்தி. முன்னதாக, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காண்பதற்கு  அவனியாபுரம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. village cooking channel என்று சமையலுக்கு பிரபலமாக இருக்கும் யூடியூப் சேனலிலும் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ராகுல்.

தேர்தல் நடக்கும் சமயத்தில் இவை அனைத்தும் நிகழ்வதால் மக்களின் மனதில் காங்கிரஸ் கட்சியை பதிய வைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் தேர்தல் வியூகமாக இருந்தாலும் கூட ராகுலின் எளிமையான அணுகுமுறையும், அமைதியான முகமும் தமிழக மக்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

திமுக குறைந்த இடங்களை ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்து போட்டியிடுமா? இல்லை தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை கூட்ட முயற்சி செய்யுமா? ஆனால், இவை அனைத்தையும் விட பொது எதிரி பாஜகவை தோற்கடிக்க, குறைந்த இடங்கள் கொடுத்தாலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரவே அதிக வாய்ப்புள்ளது.

ReplyForward

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இந்திய வானிலை துறைகள் வேலைவாய்ப்புகள் 2021

Next Post

UIDAI – ஆதார் கார்டு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2021

Next Post

UIDAI – ஆதார் கார்டு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version