போக்குவரத்து கழக செயலாளர் உள்பட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்படுவதாக தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
போக்குவரத்து கழக செயலாளர் உள்பட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்படுவதாக தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழகத் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து செயலாளர்:
கரூவூலக் கணக்குத்துறை ஆணையர் சமயமூர்த்தி மாற்றப்பட்டு, போக்குவரத்துக் கழகச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துக் கழகச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், வெளிநாட்டு மனிதவள மேம்பாட்டுக் கழக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு மனிதவள மேம்பாட்டுக் கழக ஆணையராகப் பதவி வகிக்கும் குமார் ஜெயந்த், கரூவூலக் கணக்குத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.