பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை :
இங்கிலாந்து நாட்டில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வைரஸானது சூழ்நிலைக்கு தகுந்தார் போல வளர்சிதை மாற்றம் அடைந்தும், இதன் பரவும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டிபிடித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் நகரங்களான லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் இங்கிலாந்து நாட்டிற்கு செல்லும் விமான போக்குவரத்துக்களை பல்வேறு தடைகள் விதித்துவருகின்றனர்.இந்தியாவிலும் இன்று இரவு முதல் இந்த போக்குவரத்து தடை அமலுக்கு வருகிறது.தற்போது பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read more – பாகிஸ்தான் ராணுவ கொடுமைகளை எதிர்த்து ஐ.நா.சபையில் பேசிய பெண் ஆர்வலர் : கனடாவில் மர்மமான முறையில் உயிரிழப்பு
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில்,கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு புதியவகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.அவருடன் பயணித்த எஞ்சிய பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் தமிழக மக்கள் யாரும் இதுகுறித்து அச்சப்பட வேண்டாம். பொதுமக்கள் முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே போதும் என்று தெரிவித்துள்ளார்.