தண்டையார்பேட்டையில் எரிவாயு சிலிண்டர் மூலம் 2 குழந்தைகளை எரித்து கொன்று தாயும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
தண்டையார்பேட்டை :
புதுவண்ணாரப்பேட்டை, இளைய தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பீகாரை சேர்ந்த அன்சூர் (38) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ரிம்சின் (27) என்ற மனைவியும், மகள்கள் சித்தாரா (4), மற்றும் 8 மாத குழந்தை இருந்துள்ளனர்.
நேற்று காலை அன்சூர் வேலைக்கு சென்றநிலையில், அவரது வீட்டில் ரிம்சின் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். திடீரென இரவு 7 மணியளவில் வீட்டின் படுக்கை அறை தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து அலறல் சத்தமும் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வண்ணாரப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் கொடுத்த தகவலின்பேரில் போராடி தீயை அணைத்தனர்.
வீட்டினுள் சென்று பார்த்தபோது, 8 மாத குழந்தை தீயில் கருகி இறந்து கிடந்த நிலையில், ரிம்சின் மற்றும் சித்தாரா உடல் கருகி உயிருக்கு போராடினர். சித்தாராவை தண்டையார் பேட்டை தனியார் மருத்துவமனையிலும், ரிம்சினை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
Read more – ஸ்டாலின் சொல்வதை நான் செய்யவில்லை.. நான் செய்வதை தான் ஸ்டாலின் சொல்கிறார்… போரூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு
அங்கு சித்தாரா சிகிச்சை பலனின்றி உயிரழந்தநிலையில், ரிம்சின் கவலைக்கிடமாக உள்ளார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எரிவாயு சிலிண்டரை திறந்து எரிய விட்டு ரிம்சின் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.