கட்சி கூட்டணி தொடர்பாக பேசக் கூடாது என்று எங்களுக்கு எச்.ராஜாவோ அல்லது பா.ஜ.க-வினரோ உத்தரவு போட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த நிலையில், நாங்கள் அப்படி எந்த உத்தரவும் போடவில்லை, உங்கள் அதிமுக தலைமைதான் உங்களுக்கு கட்டளை போட்டுள்ளது என்று பா.ஜ.க தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் கூட்டணி பற்றி பேசக் கூடாது என்பதுபோல் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருந்தார். இதுஅ.தி.மு.க-வுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் இடம் இதைப்பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு அவர், “கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேச வேண்டாம் என்று பா.ஜ.க தலைவர்கள் எங்களுக்கு கட்டளையிட அவர்கள் யார் என்றார். கூட்டணி தர்மத்தை எப்போதும் கடைபிடிக்க வேண்டும். நாங்களும் கடைபிடிப்போம்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு பா.ஜ.க சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை பா.ஜ.க அலுவலகத்தில் இன்று வ.உ.சிதம்பரனார்முன்னிட்டு அவருடையபடத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர்கலந்துகொண்டிருந்தனர்.
அதில், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த கருத்து குறித்து கரு.நாகராஜனிடம் நிருபர்கள் எழுப்பினார்கள். இதற்கு அவர், “கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அமைச்சர்களுக்கு பா.ஜ.க-வினர் எந்த உத்தரவும் இடவில்லை. கூட்டணி தொடர்பாக பேசாதீர்கள் என அ.தி.மு.க தலைமைதான் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கூட்டணி தொடர்பாக இருகட்சித் தலைவர்கள் மட்டும் பேசிக்கொள்வதே அரசியல் நாகரிகமாக இருக்கும். எனவே அமைச்சர்கள், போன்றோர்களின் கருத்தை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்” என்று தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர், “ரஜினிகாந்த் என்பவர்தனி மனிதர். அவர் யாருக்கு வேண்டுமானாலும் வாழ்த்துக் கூறலாம். நாளைக்கு அவர் அரசியலுக்கு வந்த பிறகு இவ்வாறு வாழ்த்தினாலும் கூட அதில் எந்த தவறும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலை பற்றி தெரிவிக்கும்போது, “கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்பம் ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனாலும்வேட்பாளர் யார் என்பதை குறித்து எங்களின் கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.




