தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, ரேஷன் கடைகளில் வரும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ரேஷனில் நவம்பர் வரை ஏற்கனவே வழங்கப்படும் 20 கிலோ அரிசியுடன் கூடுதலாக ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு முதல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் வரை இருந்த நிலையில், ஜூலை மாதமும் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து குடும்ப அட்டைதார்களுக்கு வருகிற நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்திருந்தார். தற்போது கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




