மதுரையில் கட்டிடம் விழுந்து 2 பேர் பலியாகி இருக்கின்றனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்.
மதுரை வடம்போக்கி தெருவில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான 65 ஆண்டு பழமையான கட்டிடம் இருக்கிறது. இதனை இடித்து புதிய கட்டிடம் கட்டும் பணி 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இன்று 6 பேர் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஏற்கனவே இடிக்கப்பட்டிருந்த பழைய கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் மேல் விழுந்தது. உடனடியாக பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மீட்பு பணி நடைபெற்றது. இடிபாடுகளில் சிக்கி 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.