கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றனர். இதில் தற்போது அன்றாட செலவுகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் மக்களும் உண்டு.

இந்நிலையில் எந்த பள்ளியும் திறக்கப்படும் சூழ்நிலை தற்போது இல்லை. இதில், ஒரு சில பள்ளிகள் திறக்க படாமல் இருந்தாலும் கூட தங்களுக்கு இந்த ஆண்டுக்கு முழு கட்டணம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு ஏற்கனவே அறிவித்தபடி தனியார் பள்ளிகள் சுமார் 40 சதவீதம் கட்டணங்களை மட்டும் வசூலித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது.

இதனிடையே சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்துங்கள் என கேட்டு தொந்தரவு செய்தால் feescomplaintcell@gmail.com என்ற இமெயில் மூலம் புகார் அளிக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதில் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கல்விகட்டணம் கேட்பது குறித்து புகார் தெரிவிக்கலாம் எனவும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக நீங்கள் கொடுத்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்றும் தெரிவித்தார்கள்.




