Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

உயர் அதிகாரி உத்தரவிட்டால் கொலை செய்வீங்களா?… லெப்ட் – ரைட் வாங்கிய நீதிமன்றம்!

October 20, 2021

உயர் அதிகாரி உத்தரவிட்டால் கொலை செய்வீர்களா என சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி.-க்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், கண்ணியமாக நடத்தப்பட வேண்டிய பெண்கள் காவல்துறையிலேயே அவ்வாறு நடத்தப்படாதது அவமானகரமானது என அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சிறப்பு டிஜிபியும் (ராஜேஷ் தாஸ்), பெண் எஸ்.பி. சென்னைக்கு வரவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. (டி. கண்ணன்) ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி… ஆனால் நிறைய கண்டிசன்ஸ்

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடத்துனர் கைது..!

பாலியல் தொல்லைக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும்? பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை!!

புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட உட்புகார் விசாரணைக் குழு எனப்படும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தன் மீது குற்றம்சாட்டப்பட்ட சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து சிறப்பு டிஜிபி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க மறுத்த விழுப்புரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி. உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த இரு வழக்குகளும் நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. தரப்பில் உயர் அதிகாரி என்ற முறையில் கூடுதல் டிஜிபி அறிவுறுத்தலின்படியே தான் செயல்பட்டதாக வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி வேல்முருகன் குறுக்கிட்டு பெண்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டுமெனவும், காவல்துறையிலேயே அவ்வாறு நடத்தப்படாதது அவமானகரமானது என தெரிவித்தார். காவல்துறையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென தெரிவித்ததுடன், உயர் அதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா என கேள்வி எழுப்பிதுடன், உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து வழக்கை வாபஸ்பெறுவதாக எஸ்.பி. கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விழுப்புரம் நீதிமன்ற வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார். விசாரணை நீதிமன்றத்தை மாற்றக்கோரி சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

இதற்கிடையில், விசாகா குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ ஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும் குற்றம்சாட்டி, அதன் விசாரணைக்கு தடைகோரி சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடர்ந்துள்ளார். குழு விசாரணையை முடித்த 10 நாட்களில் தனக்கு அளிக்கப்பட வேண்டிய அறிக்கை இன்னும் வழங்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

உத்தரகண்டை புரட்டி போட்ட கனமழை… உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரண நிதி!!

Next Post

மீண்டும் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் திரைப்படம்!!

Next Post

மீண்டும் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் திரைப்படம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version