விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வழங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் விதி எண் 110 ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளார். மேலும் பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது 10 அல்லது 15 நாட்களில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Read more – வேலுடன் கிரிக்கெட் விளையாடும் உதயநிதி.. அடுத்த ஓவரில் அதிமுகவிற்கு எதிராக பந்துவீச்சு..
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை எண் திட்டத்தை தொடங்கி வைத்து, அதனை தொடர்ந்து அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் 1100 உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும். 1100-ஐ தொடர்பு கொண்டு அளிக்கப்படும் குறைகளுக்கு உடனடியாக துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழக தொல்லியல்துறை சார்பில் 6 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில், கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய 4 இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணி நடக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.




