சீன ஆன்லைன் கந்துவட்டி லோன் விவகாரத்தில் கைது செய்யபட்ட சீனர்களிடம் ரா மற்றும் மத்திய உளவுதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீன போலி செயலி மூலம் கந்து வட்டி வசூலித்து மோசடி செய்தது தொடர்பான வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்று அமலாக்கத் துறையினர் விசாரணையை தொடங்கினர்,. இதில் போலி செயலிகள் மூலம் இந்திய பணம் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா எனவும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பின்னர் லோன் செயலி வழக்கில் கைதான சீனர்கள் குறித்த விவரம், குற்றப் பின்னணி கேட்டு டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியது. செயலி மோசடி வழக்கில் கைதான சீனர்கள் உட்பட 4 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்ததால் அவர்களின் விவரங்களை காவல்துறை கோரி இருந்தது. இவர்களை 6 நாள் காவலில் எடுத்து விசாரணை முடிவடிந்த நிலையில் இன்று மத்திய குற்றபிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தடை செய்யப்பட்ட சீன செயலிகளை பயன்படுத்தி 46 சாப்ட்வேர்களை பயன்படுத்தி பொதுமக்களின் தகவல்களை செல்போனில் இருந்து சட்டவிரோதமாக எடுத்திருப்பது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமக்களின் தகவல்களை சட்ட விரோதமாக திருடியது குறித்து , டெல்லியில் இருந்து சீன மொழிபெயர்பாளரை வர வைத்து, ரா மற்றும் மத்திய உளவுதுறை சீனர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சீனர்கள் விசாரணைக்கு முழு ஓத்துழைப்பு தரவில்லை என போலீசார் தகவல் கூறியிருக்கின்றனர்.