இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் 10-ஆம் தேதி காணொலி மூலமாக நடைபெறும் என்று மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் 10-ஆம் தேதியும், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 11-ஆம் தேதியும், காணொலி வழியாக நடைபெறும். இந்தக் கூட்டத்தில், கொரோனா தொற்று, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள், மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.




