தமிழகத்தில் இன்று புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,91,303 ஆக எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 6,998 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,32,454 ஆக உயர்ந்துள்ளது. 107 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 6721 ஆகும்.
52,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 70,221 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 43,46,861ஆகும்.