100 ரூபாய் பணம் தர மறுத்ததால் நண்பனை கொலை செய்த தொழிலாளருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி :
கடந்த 2017 ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மருத்துவர்கள் குடியிருப்பு கட்டட வேலைக்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளனர். இந்தநிலையில், புதுக்கோட்டையில் இருந்து தர்மதுரை, தங்கவேல் ஆகிய இருவரும் ஒரே அறையில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளனர்.
வேலை அலுப்பின் காரணமாக தர்மதுரை தனது நண்பன் தங்கவேலுவிடம் மது அருந்துவதற்காக 100 ரூபாய் கேட்டுள்ளார். அந்த நேரத்தில் தங்கவேல் என்னிடம் பணம் இல்லையென்று பணம் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆத்திரமடைந்த தர்மதுரை தனது நண்பர் தங்கவேலை தோசைக் கல்லால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Read more – இந்தோனேசியா மெராபி எரிமலை வெடிக்க தொடங்கியது : பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்
இந்த வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில்இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி தர்மதுரைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி ரூபாய் 2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.