பட்டம் பறக்க விட பயன்படும் மாஞ்சா நூல் பயன்பாடுகளை சென்னையில் தடை செய்து உள்ளார்கள் ஆனால் இந்த லாக் டவுன் சமயத்தில் தற்போது சென்னை முழுவதும் மாஞ்சா நூலில் பட்டம் விடும் கலாச்சாரம் பரவிய வண்ணம் உள்ளது இதனால் விபத்துகள் மட்டுமின்றி உயிரிழப்புகளும் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பல வருடங்களுக்கு முன்னரே சென்னையில் மாஞ்சா பயன்பாட்டிற்குத் தடை விதித்ததோடு அதை விற்றாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ சட்ட விரோதம் என நடவடிக்கை எடுக்கப்பட்டது.
லாக் டவுனில் சட்டம் மீறி பரந்த பட்டங்கள்!
சென்னை லாக்டோன் சமயத்தில் பட்டங்கள் பறப்பது அதிகமானது
இதனால் மாஞ்சா நூல் பயன்பாடும் திரும்ப வந்தது தற்போது
ஒவ்வொரு பகுதிகளிலும் தீவிரமாக கண்காணிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
இச்சூழலில், சென்னை வில்லிவாக்கம் சுற்று வட்டாரப் பகுதியில் இளைஞர்கள் மாஞ்சா நூல் அதிகமாகப் பயன்படுத்தி பட்டம் விடுவதாக புகார் எழுந்தது.
இதைப் பற்றி பல முறை சமூக ஆர்வலர்கள் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் தெரிவித்தார்கள்
போலீஸ் தம்பதிக்கு நேர்ந்த விபத்து
சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் ஜெய்குமார் (42) சென்னை வேப்பரி காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி மகேஷ்வரி (38) மத்திய குற்றப்பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
சென்ற வாரம் இரவு 10 மணி அளவில் கொரட்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் இருவரும் கிளம்பியுள்ளனர் மீண்டும் வீடு திரும்ப கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பு வருவதற்கு பாடி மேம்பாலத்தின் மீது வந்துள்ளனர்.
அப்போது தீடீரென்று மாஞ்சா நூல் காவலர் ஜெயகுமார் கழுத்தில் மாட்டி இறுக்கியது அதில் நிலைத்தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் மாஞ்சா நூல் கீறிய காயம் மற்றுமின்றி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது அவர் பின்னால் அமர்ந்திருந்த பெண் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு நிலைகுலைந்து போனார். அருகிலிருந்த பொது மக்கள் ஓடி வந்து உதவி செய்து வில்லிவாக்கம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அவர்கள் இருவரையும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையில் மாஞ்சா நூல் தடை செய்திருந்த நிலையில் அந்தப் பகுதியில் இதன் பயன்பாட்டைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ரஜீஸ் பாபுவை கட்டுபாட்டு அறைக்கு உடனே இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பரவிவரும் மாஞ்சா நூல் கலாச்சாரத்தை காவல்துறை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் மட்டுமின்றி அனைவரின் விருப்பமாகும் அப்படி செய்தால் மட்டுமே இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்கும் .