திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமாரை பிளே பாய் என விமர்சித்துள்ளார்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமுத்து எனும் ஆட்டோ ஓட்டுனர் எப்.சியை புதுப்பிக்க ஐந்து மாதங்களாக அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முயற்சித்துள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களால் அதிகாரிகள் அவரை அலைகழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் நொந்தவர், ஒருகட்டத்தில் அவரே ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுநர் தாண்டவமுத்துவிற்கு, தனுது ஆழ்வேர்பேட்டை இல்லத்தில் வைத்து புதிய ஆட்டோவை வழங்கி உதவினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, தமிழகத்தில் நடைபெறும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் கரப்சன் ஆட்சி என்று விமர்சனம் செய்தார். மேலும் இ பாஸ் முறையை நிறுத்த வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தார். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலினை சாக்லேட் பாய் என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை எனவும், என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் ஒரு Play Boy என்றும் கிண்டலாக பதிலளித்து உள்ளார் .