திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட, தி.மு.க., துணைச் செயலர், 67 வயதான சூழலில், 28 வயது இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.

திருவண்ணாமலை அடுத்த சாவல்பூண்டியை சேர்ந்தவர், சுந்தரேசன், 67; தி.மு.க.,வில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். முன்னாள் அமைச்சர் பிச்சாண்டியிடம் உதவியாளர்க சேர்ந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து ஆறுமுறை சாவல்பூண்டி பஞ்., தலைவராக தேர்வானார். சாவல்பூண்டி சங்கப்பலகை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல பேச்சாளர்களை உருவாக்கினார்.
இந்நிலையில் இவர் திருவண்ணாமலையை சேர்ந்த அபிதா அவருக்கு இருபத்தி எட்டு வயதாகியுள்ளது. அவரை இவர் கலையகம் செய்துள்ளார். இவர் ஒரு பட்டிமன்ற பேச்சாளர். இவர்கள் இருவரும் காதல்வயப்பட்டு உள்ளனர். இவர்கள் மூன்று வருடம் காதலித்து கல்யாணம் செய்துள்ளனர். இது, தி.மு.க.,வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுந்தரேசன் கூறியுள்ளார், அவர் கூறியது யாதெனில் வயதான காலத்தில், தன் உதவிக்கு ஒருவர் தேவை என, மணியம்மையை, ஈ.வே.ரா., திருமணம் செய்தார். நான் அவரது வழியில் வந்தவன். தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, காலையில் கோபாலபுரம், மாலையில், சி.ஐ.டி., காலனிக்கு செல்வார்.அதுபோல், என் மனைவி தரப்பிலும், அபிதாவின் பெற்றோர் தரப்பிலும் சம்மதம் பெற்று, காதலித்து திருமணம் செய்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறேன். இரு மனைவியரும், அருகருகே தனித்தனியாக வசிக்கின்றனர். இருவர் வீட்டிற்கும் சென்று வருகிறேன் என கூறியுள்ளார்.




