முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டம் உயர்ந்துவருவதால், கம்பம் சுற்றுவட்டார பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக முல்லைப்பெரியாரின் நீர் மட்டும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரியில் நீர் வரத்து அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே ஆகஸ்ட் 6 ம் தேதி வரை இடுக்கி மாவட்டப்பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ள்ளது.
இதன் தொடர்ச்சியாக முல்லைப்பெரியார் அணையிலும் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் கம்பம் சுற்றுவட்டார பகதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது. இதோடு அணைக்கரையில் உள்ள கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மாற்று இடத்திற்கு செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.