லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டடுள்ளது. இந்த வெடிவிபத்தானாது தலைநகர் பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.

துறைமுகப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் ஏற்பட்டிருக்க கூடும் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. அந்த வெடிபொருள் சோடியம் நைட்ரேட் என தெரியவந்துள்ளன.
வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் துறைமுகம் சார்ந்த பகுதி ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது. இது நைட்ரஜன் டை ஆக்சைடு நச்சு வாயுவாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள லெபனானில் நடைபெற்ற வெடிவிபத்துக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த வெடிவிபத்து பெய்ரூட்டில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவுகளிலும் உணரப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2 ஆயிரத்து 750-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.