வெளிநாடுகளுக்குச் சென்று சட்டவிரோத பொருள்களைக் கடத்தி கொண்டுவருபவர்களை குருவி என்று அழைக்கப்படுவார்கள். அதில் ஒரு சில குருவிகள் சமயத்தில் அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு.
இதற்காகவே விமான நிலையங்களில் அடிக்கடி இந்த அறிவிப்பும் ஒளிபரப்பப்படும் அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் பொருள்களை தயவுசெய்து வாங்காதீர்கள் அதைக்காதில் வாங்காத ஒருவருக்கு ஏற்பட்ட கதிதான் நாம் பார்க்கப் போகிறோம்.
ஏர் இந்தியா விமானம் iX1636 சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் விமானம் மூலமாக சார்ஜாவில் இருந்து வரும் பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வருவதாக தகவல்கள் கஷ்டம்அதிகாரிகளுக்கு கிடைத்தது . இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு குழுவை சேர்ந்த அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தை அவர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தனர் .
நான் ரொம்ப அவசரமா போகணும் என்று நிறுவிய ஒரு பயணியை அவருடன் எடுத்துக்கொண்ட அட்டை பெட்டியுடன் வெளியில் செல்லும் எக்ஸிட்வாயிலில் மடக்கி பிடித்தார்கள்.
அவர் பெயர் ஜாகீர்உசேன் என்பதும் தமிழ்நாட்டில் திருவாரூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்பு அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய துணிமணிகள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் போன்ற சில கருவிகள் இருந்தது. அதில் வீட்டுக்கு உபயோகப்படுத்தும் மின்சார Wrench இயந்திரம் ஒன்று இருந்தது .
இதனைக் கண்டு ஆச்சரியம் மற்ற அதிகாரிகள் தங்க மதிப்பீடு செய்பவரை அழைத்து வந்து அந்த கருப்பு வர்ணத்தை முழுதுமாக அகற்றி விட்டு அந்த உலோகத்தை மதிப்பீடு செய்தபோது சுமார் 64 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட 1.16 கிலோ எடைகொண்ட தங்கம் என்று மதிப்பீட்டில் தெரியவந்தது.
இந்நிலையில் ஜாகிர் உசேன் தனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் இந்த கருவியை ஷார்ஜா விமான நிலையத்தின் நுழைவு வாயில் வைத்து ஒருவர் தன்னிடம் கொடுத்ததாகவும். நீங்கள் விமான நிலையத்தின் வெளியில் வந்தவுடன் கிண்டியில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து உங்களை ஒருவர் தொடர்பு கொள்வார் அவரிடம் இந்த பொருளை ஒப்படையுங்கள் என்றும் அந்த பயணி தெரிவித்தார் என ஜாகிர் உசேன் கூறினார்.
ஜாகிர் உசேனை முழுமையாக பரிசோதனை நடத்திய பிறகு அதிகாரிகள் குழு ஒன்று அவருடன் இணைந்து பேருந்தில் சென்றார்கள். இன்னொரு குழு அவரின் பின்னே பேருந்தில் சென்றார்கள்.
ஜாகிர் உசேன் குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலை அடைந்தபின் அங்கே அவருக்காக காத்திருந்த நபரிடம் தொடர்பு கொண்டு பொருளை ஒப்படைக்கும் வரை காத்திருந்து பொருளை பெற்ற சென்னையை சேர்ந்த முகமது ஆசிப் என்ற நபரையும் கைது செய்தனர் .