கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனியின் மீது உள்ள அளவறியா காதலால் தன் வீடு முழுவதும் மஞ்சள் நிறம் மற்றும் தோனியின் உருவப்படத்தை வரைந்துள்ளார்.

கடலூர் :
கடலூர் மாவட்டம் அரங்கூர் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி- விஜயா தம்பதியரின் மகன் கோபிகிருஷ்ணன். இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டும் . தோனியின் தீவிர ரசிகரான இருந்துள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் முடித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றார்.
வெளிநாடு சென்றும் கிரிக்கெட்டும் அவரை விடவில்லை.தோனியின் மீது உள்ள காதலும் குறையவில்லை.தோனி துபாய் சென்ற நேரம் எல்லாம் அவரை பார்க்க முயற்சி செய்து,இறுதியாக பார்த்தும் உள்ளார்.

இந்த நிலையில் துபாயில் இருந்து திரும்பி வந்த கோபி கிருஷ்ணன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது வீடு முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அணியும் ஆடை நிறத்திலும், அதில் தோனியின் படத்தையும் வரைய முடிவு செய்து சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவழித்து சி.எஸ்.கே அணியின் நிறமான மஞ்சள் நிறத்தை தனது வீடு முழுவதுமாக வர்ணம் பூசி அசத்தி உள்ளார்.
மேலும் தோனி படம் மற்றும் சி.எஸ்.கே லோகோ போன்றவற்றையும் சுவரில் வரைந்து வீட்டின் முன் பகுதியில் ஹோம் ஆப் தோனி ஃபேன் என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.
தற்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




