தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
சென்னை :
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கியது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தமிழகத்தில் முதலாவதாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி எதுவும் போடப்படாமல் சுகாதார பணியாளர்கள் ஒத்திகையில் மட்டுமே வருகின்றனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3 இடங்களிலும், நீலகிரியில் உதகை மருத்துவ கல்லூரி, குன்னூர் அரசு மருத்துவமனையில் 3 இடங்களிலும், நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 இடங்களை தொடர்ந்து கோவை மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு 2 மணி நேரத்தில் தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.
Read more – எளிய மக்கள் யாரும் தி.மு.க.வில் பதவி வகிக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இந்தியாவில் ஏற்கனவே பஞ்சாப், ஹரியானா, அசாம், குஜராத் மாநிலங்களில் இந்த தடுப்பூசி ஒத்திகை நடந்த நிலையில் தற்போது, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் சுமார் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.