செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா துவங்கிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: கீழடியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அங்கு நடந்த அகழாய்வில் இரண்டு வகையான சுடுமண்ணாலான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளது. இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒலிம்பியாட் போட்டியை தொடங்க 18 மாதங்கள் ஆகும், தமிழ்நாடு அரசு நான்கே மாதத்தில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழ்நாட்டின் மதிப்பும் பெயரும் இன்று முதல் மேலும் உயரும். 2018ம் ஆண்டு மிக சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா. இந்தியாவில் உள்ள 75 கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் பெருமை மேலும் உயரும். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவுள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்” இவ்வாறு தெரிவித்தார்.