சசிகலா விடுதலை நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்
மெரினாவில் பீனிக்ஸ் பறவையின் வடிவமைப்பில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்துவைக்கிறார். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா ஜனவரி 27 ஆம் தேதிதான் பெங்களூரில் இருந்து விடுதலையாகிறார். அன்றைய நாளில்தான் ஜெயலலிதா நினைவிடமும் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.




