சென்னை பெருநகர காவல் துறையால் கடந்த 02.07.2020 முதல் 18.07.2020 வரை நடத்தப்பட்ட தொடர் வேட்டையில், 174.50 கிலோ கஞ்சா, கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 19 குற்றவாளிகள், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 7 நாட்களில் நடத்தப்பட்ட தொடர் வேட்டையில்,38.50 கிலோ கஞ்சா மற்றும் 7 குற்றவாளிகள் மற்றும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுவரை 213 கிலோ கஞ்சா மற்றும் 26 குற்றவாளிகள்,கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இதுபோன்ற கடத்தல் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் விற்பவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.