கோவை மாநகராட்சி பகுதிகளில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் saravan Kumar jadavath தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது கோவை மாநகராட்சி பகுதிகளில் 100 வார்டுகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை இடையர்பாளையம் வேலாண்டிபாளையம் டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் கையுறை கண்டிப்பாக அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார் மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது .

அந்தந்த பகுதியில் பொதுமக்கள் நேரில் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் சளி காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் வெளி மாவட்டத்திலிருந்து ஒருசிலர் கோவை மாவட்டத்திற்கு வந்துவிடுகின்றனர் அவர்களைப் பற்றி தகவல் இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்




