கேஸ்டோ க்ளப் என்கிற ஆன்லைன் லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் நிதிஷ். கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக்க் கடை ஒன்றிலும் பணிபுரிந்து வந்துள்ளார். ஆன் லைன் விளையாட்டுகளில் விருப்பமுடைய நிதிஷ் கேஸ்டோ க்ளப் என்கிற ஆன் லைன் விளையாட்டை ஆடத் தொடங்கியுள்ளார். விளையாட்டில் தொல்வியடைந்த நிதிஷ் தன் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை இழந்துள்ளார். பின்பு தான் பகுதி நேரமாக வேலை பார்த்த கடையில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி அதையும் தோற்றிருக்கிறார். இதனால் மனமுடைந்த நிதிஷ் தான் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதில் தான் வேலை பார்த்த கடையின் ஓனருக்கு மன்னிப்புக் கோரி விட்டு, தான் காதலித்த பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு அடுத்த ஜென்மத்தில் இணைவோம் என்று எழுதி வைத்திருக்கிறார். 20 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்து விளையாட்டில் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.