தி.மு.க கட்சி விண்வெளியில் சென்று பிரச்சாரம் செய்தாலும் தமிழக மக்கள் ஒருபோதும் அவர்களை நம்பமாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை:
மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:நிவர் புயல் தாக்கியபோது அதை முதல்வர் திறம்பப்பட எடுத்த நடவடிக்கையால் தமிழகம் பெரும் சேதத்தில் இருந்து தவிர்க்கப்பட்டது.நிவர் புயல் ஏற்படுத்திய சேதத்தின் நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை எப்பொழுதும் குறைகூறும் திமுக கட்சி.விண்வெளியில் சென்று பிரச்சாரம் செய்தாலும் தமிழக மக்கள் ஒருபோதும் அவர்களை நம்பமாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.மேலும் அவர் வருகின்ற டிசம்பர் 4 ம் தேதி தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.