இணையதளம் மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு காப்பீடு மோசடி செய்த நபர்களை போலீஸ் கைது செய்து இருக்கிறது.

இணையதளம் மூலம் வாகன காப்பீடு பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறைக்கு தகவல் வந்ததை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் 6 பேரை கைது செய்து இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணம், 133 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்கள், ஸ்கார்பியோ கார் போன்றவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து இருக்கின்றனர்.

விசாரணையில் அவர்கள் 300-க்கும் மேற்பட்ட போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடி கும்பல் தலைவனான மாரியப்பன், ஆனந்த், அன்சாரி அலி, ஜெயின் அலாவுதீன், செந்தில்குமார், சுமதி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மோசடி குறித்து அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.




