இயேசு அழைக்கிறார் நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனை முடிவடைந்தது. கணக்கில் வராத பல கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்.

பால் தினகரன் விசாரணைக்காக அடுத்த வாரம் சென்னையில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் கொடுத்துள்ளது. 120 கோடி ரூபாய் கணக்கில் வராத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான வெளிநாட்டு முதலீடுகள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரும் வருவாயை கணக்கில் காட்டாமல் இந்தியா மற்றும் வெளிநாட்டில் வைத்திருப்பதாக கண்டுபிடித்தனர்.
கோவை காருண்யா பல்கலைக் கழகத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெறப்பட்ட நிதியை இந்தியாவிலேயே கணக்கில் காட்டாமல் முதலீடு செய்துள்ளதாகவும் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதியை வெளிநாட்டிலேயே பல்வேறு நிறுவனங்களின் முதலீடாக வைத்து இருந்ததையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்




