வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் ஆக மட்டும் சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம் குழுவாக செல்வதற்கு அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ளது ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்ட கோலாகலத்துடன் கொண்டாடப்படும். குறிப்பாக பெரிய சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு அதற்கு வழிபாடும் நடத்தப்படும் பின்பு சில நாட்கள் கழித்து சிலைகளை கடலில் கரைக்கும் சம்பிரதாயமாக நடை பெற்றுக்கொண்டிருந்தது.

ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு அனைத்து விதமான விநாயகர்சிலை நிறுவுவதற்கும் ஊர்வலம் நடத்துவதற்கும் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தளர்வு கேட்டு உயர்நீதிமன்றத்தில் ஊர்வலத்திற்கு அனுமதி தருமாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது . ஆனால் உயர்நீதிமன்றம் ஊர்வலம் நடத்தவும் விதித்த தடையை தளர்த்தவும் இயலாது என்றும், வேண்டுமானால் வீட்டில் வழிபடும் விநாயகரை மட்டும் தனியாக சென்று நீர்நிலைகளில் கறைத்துக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது . எந்த காரணத்திற்காகவும் குழுவாக சென்று விநாயகரை கரைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.




