கோவை மாநகராட்சி பள்ளிகளில் இந்தியை திணிக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியை தற்போது கோவை மாநகராட்சி தொடங்கியுள்ளது.பள்ளியில் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளை சேர்க்க கொடுக்கப்படும் விண்ணப்ப படிவங்களில் 18 காளம்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 14ஆவது காளத்தில்,இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா அல்லது கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்து இருக்கின்ற நிலையில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை லேயே ஹிந்தி படிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு ஹிந்தியை திணிக்க தொடங்கி விட்டதா? கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி மத்திய அரசு புகுத்துகிற புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டதா என்ற ஐயம் எழுகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து இருக்கக்கூடிய நிலையில் அந்த குழு எந்த பரிந்துரையும் செய்யாத நிலையில்,புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த விட்டதா?

உடனடியாக கோவை மாநகராட்சி ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் 20.8.20 காலை 11 மணி அளவில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்கோவை ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர்,தந்தை பெரியார் திராவிடர் கழகம் தெரிவித்துள்ளார் .




