அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அப்போது, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கை பணிகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒரு சில சான்றிதழ்கள் இல்லை என்றாலும், முதலில் மாணவரை சேர்த்துவிட்டு, பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.