விருதுநகரில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றது. இதற்கு கடுமையான தண்டனைகள் சட்டத்தின் மூலம் வழங்கப்படாமல் இருப்பதன் காரணமாக தான் 2 வயது சிறுமி முதல் வயதான பாட்டி வரை அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுவருகிறார். அதே போன்று தற்போது விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டி பகுதியில் வசித்து வந்த 15 வயது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இவரது பெற்றோர்கள் கூலித்தொழிலாளியாக இருக்கும் நிலையில், இந்த சிறுமியை வீட்டில் விட்டு விட்டு அவர்கள் வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தீடிரென இச்சிறுமிக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அச்சிறுமி கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த தகவல் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியாகியுள்ளது.
இதனையடுத்து மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் அண்ணன் முறையான கணேசன் மற்றும் தையல் கடை நடத்திவரும் பாண்டி ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
எனவே இச்சம்பவத்திற்கு காரணமாக இருவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.