ரவுடிகளுடன் போலீசார் இணக்கமாக இருப்பது போலவும், இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வது போலவும் சினிமாவில் ஏராளமான காமெடி காட்சிகளைப் பார்த்திருப்போம். அதேபோல் திரைப்படங்களில் பிரபல தாதாக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே சென்று போலீஸ் அதிகாரியான கதாநாயகனுக்கு சவால் விடும் சீனையும் பார்த்திருப்போம். தற்போது அந்த காட்சிகள் சென்னையில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு தரும் ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல முக்கிய குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல்நிலையத்திற்குள்ளேயே நுழைந்து ரவுடி ஒருவன், திமிராக போலீசை மிரட்டும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்திற்குள் புகுந்து கார்த்தி என்ற ரவுடி, அங்குள்ள காவலர் ஒருவரை தகாத வார்த்தைகளில் சகட்டுமேனிக்கு திட்டுகிறார். இடையில் அங்குள்ள காவலர்களை பார்த்து அண்ணன் என உறவும் கொண்டாடுகிறார். ‘சண்ட பண்ணலாமா… இங்கேயே உன் தொண்டையை அறுத்து போட்டுவிடுவேன்’ என்றெல்லாம் சக காவலர்கள் முன்னிலையே மிரட்டுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதோடு, அந்த ரவுடிக்கு காவல்துறையினர் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதோ அந்த வீடியோ…




